2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கிளி. மக்களை சந்தித்தார் சம்பிக்க

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

பெருந்தெருக்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, கிளிநொச்சிக்கு இன்று (05) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி, பரந்தனின் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.

மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கருத்து முன்வைத்தனர்.  

அவற்றுக்குப் பதிலளித்த சம்பிக்க, குறித்த பிரச்சினைகள் தொட்பில் எழுத்து மூலமாகத் தருமாறும், அதற்குப் பொருத்தமானவர்களுக்குத் தகவலை வழங்கி, தீர்வு பெற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X