Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 மார்ச் 06 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன்சந்தை பகுதிக்கு செல்லும் பிரதான பாதைக்கு அருகிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இன்று (06) காலை மன்னார் நகர சபை ஊழியர்களால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பைக்குள் இருந்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கிளைமோர் குண்டு சுமார் 3 கிலோ கிராம் நிறை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் கடைகள் காணப்படுகின்றமையினால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து குறித்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் குறித்த வெடிபொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago