2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குஞ்சுக்குளத்தை விட்டு நகரும் மக்கள்

Editorial   / 2019 மே 14 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமம், உவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள், அங்கிருந்து தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இக்கிராமத்தில், சுமார் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களும் 12 வரையான சிறுகுளங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில், யுத்தம் காரணமாக, உவர்நீர் தடுப்பணைகள் சேதமடைந்ததால், பூநகரி, பாலாவி போன்ற பகுதிகளில் பெருக்கெடுக்கும் கடல் நீர், மண்டைக்கல்லாறு வழியாக உட்புகுந்து, சுமார் 900 ஏக்கர் வரையான விளைநிலங்கள் உவரடைந்துள்ளன.

அத்துடன், நன்னீராகக் காணப்பட்ட சகல கிணறுகளும் உவராகியுள்ளன.

இதனால், இப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் முழுமையாக இடம்பெயர்ந்து சென்றுள்ளதுடன், இப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குஞ்சுக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, முன்பள்ளி ஆகியனவும் செயலிழந்துள்ளன.

தற்போது, இப்பகுதியில், மூன்று வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .