2025 மே 21, புதன்கிழமை

‘குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என பெற்றோர்கள் வலயக் கல்விப் பணிமனையிடம் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரு கல்வி வலயங்கள் இயங்குகின்றன. முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 65 பாடசாலைகளும் துணுக்காய் கல்வி வலயத்தில் 60 பாடசாலைகளும் இயங்குகின்றன.

ஜூன், ஜூலை மாதங்களில் பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி ஆண்டு தோறும் காணப்படுவதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் நோய்த்தாக்கத்துக்கும் உட்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.

பாடசாலைகளுக்குச் செல்கின்ற சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் சுத்தமான குடிநீரை மாணவர்கள் அருந்த வேண்டும் என விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், பாடசாலைகளில் குடிநீர் கூட இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இதன் காரணமாக மாணவர்களின் பற்கள் கூட பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, வலயக் கல்விப் பணிமனைகள் மாணவர்களின் நலன் கருதி சிறந்த குடிநீர்த் திட்டத்தை பாடசாலைகளில் ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .