2025 மே 16, வெள்ளிக்கிழமை

குடிநீர் பிரச்சினையால் அவதியுறும் பாரதிபுரம் மக்கள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பாரதிபுரம் கிராமத்தில், தினமும் தாங்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள பாரதிபுரம், சாந்தபுரம், பொன்னகர், மலையாளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக, குடிநீர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பாரதிபுரம், கால் ஏக்கர் திட்டம், செபஸ்ரியார் கோவிலடி, பாரதிபுரம் மத்தி ஆகிய இடங்களில் வரட்சி நிலமை காணப்பட்டாலும் தண்ணீருக்கான தட்டுப்பாடு குறிப்பிட்ட சில இடங்களில் பெரியளவில் இல்லை. இருந்ததபோதும் கிணறுகளில் காணப்படும் உவர்நீர் பரம்பல் காரணமாக, குடிநீருக்கான தட்டுப்பாடு நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, அதிகளவான கிணறுகள் உவர்நீரைக் கொண்ட கிணறுகளாக காணப்படுகின்றன. இதனால் இவ்வாறான நீரை  வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டாலும் குடிநீருக்காக தாங்கள் பெரிதும் துன்பங்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனைவிட, பாரதிபுரம், பொன்னகர், மலையாளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் வரட்சி நிலை காரணமாகவும் தண்ணீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதனால் வாழ்வாதாரச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .