Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உள்ளூராட்சி மன்றங்களின் ஆசனப் பங்கீடுத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இருந்து வந்த பிரச்சினை, எமது குடும்ப பிரச்சினை. நாங்கள் தற்போது எமது குடும்பப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மன்னாரில் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் வெற்றி பெறும்” எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, இலங்கை தமிழரசுக்கட்சி, மன்னார் தேர்தல் திணைக்களத்தில் நேற்று (15) மாலை கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சிமன்றங்களுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்
50 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago