Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 25 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில், குப்பைகளை அகற்றுவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று இன்று (25) வவுனியா நகரசபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக, நகரசபையின் உபதவிசாளர் சு. குமாரசுவாமி தெரிவித்தார்.
இதற்கமைய, இந்தப் பணிகள், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியா நகரசபை வேலைப்பகுதி, சுகாதாரப் பகுதி ஊழியர்களின் மாதாந்தக் கூட்டம், இன்று (25) நடைபெற்றது. அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், வவுனியா நகரசபையால், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் வீடுகள், தெருக்களிலுள்ள ஏனைய குப்பைகளை அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த விசேட வேலைத்திட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏனைய கிழமை நாள்களில், அன்றாட குப்பை அகற்றும் நடவடிக்கை,
வழமையான முறையில் நகரசபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் விசேடமாக ஒவ்வொரு பகுதிகளைத் தெரிவுசெய்து, அங்கிருக்கும் ஏனைய குப்பைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இதற்கென நீளமான உழவு இயந்திரப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், இதை பயன்படுத்தி, இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வைரவப்புளியங்குளம் பகுதியில், இந்த விசேட குப்பை அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, பொதுமக்கள் தமது அன்றாட குப்பைகளை விட்டு, ஏனைய குப்பைகளை, குப்பை அகற்ற வரும் ஊழியர்களிடம் வழங்கி, நகரசபை ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அவர் வலியுறுத்தினார்.
14 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago