Niroshini / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (26), செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று(28), மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே, இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடிபொருள்களும் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டு வருகின்றன.
இதன்போது, ரி56 ரக துப்பாகிகள், வெடிபொருள்கள் என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து குறித்த அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிபொருள்கள் ஆகியன துருப்பிடித்து காணப்படுவதாகவும், அவை செயல் திறன் உள்ளவையா என்பது தொடர்பில் அகழ்வு பணிகள் நிறைவுற்றதன் பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிபொருள்கள் மீட்கப்படும் தனியார் காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
32 minute ago
45 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago
45 minute ago
10 Nov 2025