2025 மே 05, திங்கட்கிழமை

குருந்தூர் மலையில பிரித் ஓதிய பிக்குகள்

Niroshini   / 2021 மே 11 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு -  குருந்தூர் மலைப்பகுதியில், தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று  (10) மாலை,  நூற்றுக்கணக்கான படையினர் மற்றும் படை அதிகாரிகளுடன், பௌத்த துறவிகள் பலர் பிரித் ஓதும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக, மக்கள் கூட்டங்களைத் தவிர்fக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மே 18ஆம் திகதியன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக, முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள், அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும், அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று, இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி பிரதானியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குருந்தூர் மலைக்கு, முல்லைத்தீவு மாவட்டப் படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள், பொலிஸாருக்கோ,  தொல்பொருள் திணைக்களத்துக்கோ, மாவட்டச் செயலாளருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காது சென்றுள்ளனர்.

படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அங்கு பௌத்த துறவிகளால் பிரித் ஓதப்பட்டுள்ளதுடன்,  புனர்நிர்மானப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X