2025 மே 03, சனிக்கிழமை

’குளங்களுக்கு செல்லாதீர்கள்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

06 நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குளங்கள் அனைத்திலும் தற்போது நீர் நிரம்பி உள்ளமையால், சிறுவர்கள், பெரியவர்கள், குளங்களின் சூழலுக்குச் செல்ல வேண்டாமென, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு அவர் அறிவுறுத்துகையில், “மழைக் காலத்தில் குளங்கள் நிரம்புகின்றபோது, குளச் சூழல் ஆபத்து மிகுந்ததாகவே இருக்கும். குளச் சூழலுக்குத் தேவையற்ற விதத்தில் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம், ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். 

“முல்லைத்தீவு மாவட்டக் குளங்களின் அணைக்கட்டு வீதி வழியாகப் போக்குவரத்துகள் நடைபெறுவது வழமை. இது, மழைக் காலங்களில் ஆபத்தானது. கடந்த காலங்களில் அணைக்கட்டு வீதி வழியான போக்குவரத்துகளுக்கு மாற்று வழிகள் தொடர்பாக சிந்தித்த போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

“எதிர்காலத்தில் அணைக்கட்டு மேலான போக்குவரத்துகளைத் தவிர்ப்பதன் மூலம், வவுனிக்குளத்தில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற விபத்துகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்றார். 

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய குளங்கள் தற்போது நீர் நிரம்பி வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் இப்பகுதிகளுக்குத் தேவையற்ற விதத்தில் எவரும் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X