2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குளங்கள் அபிவிருத்தி: உலக வங்கிக்கு மதிப்பீடு அனுப்பிவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்ப்பாசனக் குளங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, உலக வங்கியின் திட்ட அலுவவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நீரப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்மடுக்குளம், அக்கராயன்குளம், பிரமந்தனாறுக்குளம், குடமுருட்டிக்குளம், கரியாலை, நாகபடுவான், வன்னேரிக்குளம், கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட குளங்கள் பனரமைப்பு செய்வதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்மடுக்குளத்தைப் புனரமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாயும், அக்கரயான் குளத்தைப் புனரமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாயும், பிரமந்தனாறு குளத்தைப் புனரமைப்பதற்கு 80 மில்லியன் ரூபாயும், குடமுருட்டிக்குளத்தைப் புனரமைப்பதற்கு 115 மில்லியன் ரூபாயும் கரியாலை நாகபடுவான் குளத்தைப் புனரமைப்பதற்கு 320 மில்லியன் ரூபாயும் வன்னேரிக்குளத்தைப் புனரமைப்பதற்கு 80 மில்லியன் ரூபாயும் கனகாம்பிகைக்குளத்தைப் புனரமைப்பதற்கு 75 மில்லியன் ரூபாயும் தேவை என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .