Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளரும் சபை உறுப்பினர்களும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (30) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.
இதன்போதே, தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனத் தெரிவித்து தவிசாளரும் உறுப்பிர்களும் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.அமிர்தலிங்கம், தனக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததன் காரணமாக தானும் உறுப்பினர்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையெனவும் தெரிவித்தார்.
இப்புறக்கணிப்பில் கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மக்களின் பிரதிநிதிகள் கூட்டத்துக் அழைக்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், கட்சிகளின் ஒரு பிரதிநிதி மாத்திரமே கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமென, கடந்த அரசாங்கமே வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தாகத் தெரிவித்தார்.
இதில் மாற்றம் செய்வது தொடர்பாக, புதிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டுமெனவும், அவர் கூறினார்.
அத்துடன், இவ்வாறான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்வதில், தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென, மஸ்தான் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025