2025 மே 17, சனிக்கிழமை

‘கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்’

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைவர் காட்டித் தந்த அரசியல் என்றால், அது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பெனத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறப்பு தளபதி அச்சுதன், எனவே தமிழ் மக்களாகிய நீங்கள் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டு​மென்றார்.

மன்னாரில், நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தலைவரால் வளர்க்கப்பட்ட தாங்கள் உட்பட தலைவரின் கட்டமைப்பை விட்டு யாருமே விலக முடியாதெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒவ்வொரு தமிழனுக்குமான உரித்தெனவும் கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பான தமது வீட்டை தாங்கள் உடைத்தோமாக இருந்தால், அந்த வீட்டுக்கு யாருமே உரிமை கோர முடியாதெனத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட்டு செல்வது பிழையெனவும் தலைவரின் கட்டமைப்பை அனைவரும் சேர்ந்து வழி நடத்துங்களெனவும் கூறினார்.

தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆனால், இவர்கள் இந்த முறையும் தங்களை ஏமாற்றுபவர்களாக இருந்தால், தமாங்கள் இவர்களுக்கு எதிராக போரிடுவோமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .