Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணித்ததால் தான் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, நேற்று (06) தாக்குதலுக்கு இலக்கான புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்ப்பாட்டாளர் த.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து, இன்று (07) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், நீலன் அறக்கட்டளை அணியைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தன்னை, புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இம்முறை மாகாணசபைத் தேர்தலின் வேட்பாளராக இருக்குமாறும், அவர்கள் தன்னை வற்புறுத்தி வந்ததாகத் தெரித்த அவர், அதற்கு தான் மறுப்பு தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாவையுடனும் இணைந்து செயற்படபோறியா” என அவர்கள் தன்னை அச்சுறுத்தி வந்த நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago