Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
தாங்கள் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
வீடமைப்பு அமைச்சால், கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகள் சமய கல்விக்கான கட்டடங்கள் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள், இன்று (03) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
தாங்கள் தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்து வருவதாகவும் அந்த வகையில் தாம் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லையெனவும் குறிப்பிட்டார்.
இப்போது உள்ள அரசாங்கம் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை இந்த அரசாங்கமே தொடர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
“கடந்த சில நாள்களாக ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் தொடர்பில் எதிர் கருத்துகளை முன்வைத்து வருகின்றீர்கள். இந்த நிலையில் அவ்வரசாங்கத்தின் நிகழ்வுகள் பலவற்றிலும் கலந்துகொள்கின்றீர்கள். உண்மையில் எவ்வாறான நிலையில் நீங்கள் உள்ளீர்கள்?” என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
அதற்கு பதிலளித்த அவர், தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்வுகளில் பங்கு கொள்ளவில்லையெனவும் இது தாம் கொண்டுவந்த அரசாங்கமெனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்குகும் தமக்கும் இடையில் ஒப்பந்தம் உள்ளததெனத் தெரிவித்த அவர், இவை ஐக்கிய தேசியக் கட்சியின் அபிவிருத்திகள் அல்லவெனவும் குறிப்பிட்டார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025