Freelancer / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடைத் தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்புப் பிரதேசத்தில் ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகள், இன்று திங்கட்கிழமை (27) காலை மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 41 கிலோ 620 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, குறித்த கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கருங்கண்டல், வண்ணாங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. (N)
37 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago