2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கைவிடப்பட்ட பொதுக் கிணறு துப்புரவு செய்யப்பட்டது

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட பொதுக் கிணறு, துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தால், மூன்று இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கிணறு, கடந்த 2 ஆண்டுகளாக இறைத்துத் துப்பரவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரனிடம் அக்கராயன் மேற்கு மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அக்கராயன் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன், குறித்த கிணறு துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

இக்கிணற்றில் இருந்து தற்போது 50 வரையான குடும்பங்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .