Niroshini / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி, கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அண்மையில், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, அவர் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அவர், வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வவுனியா நகரசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா - கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவுகளின் உள்ள கிராமசேவகர்கள் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago