Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரிபுரம் சத்திப் பகுதியில் அமைந்துள்ள அலைபேசி விற்பனை கடையில், பாரிய இலத்திரனியல் பொருட்களை திருடி விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டது.
கடந்த 24ஆம் திகதி அன்று சுதந்திரபுரம் பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை கடை ஒன்றில் ஒன்பது அலைபேசிகள், ஒலி சாதனம் ஒன்று, மூன்று கெட்போன்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கடை உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (02) வவுனியா - மெனிக்பாம் பகுதியில் அலைபேசிகளை விற்பனை செய்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், உடையார் கட்டு – வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் கைதுசெய்தனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago