2025 மே 23, வெள்ளிக்கிழமை

’கௌதாரிமுனையை பாதுகாக்க வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இயற்கையும்,தொன்மையும் நிறைந்த கௌதாரிமுனையை பாதுகாக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கௌதாரிமுனைக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இப்பிரதேச மக்கள் விவசாயம், கடல் தொழில் மற்றும் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும்  இப்பிரதேசத்தை பாதுகாத்து சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்தினால் பிரதேச மக்களும் வருமானங்களை ஈட்டக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், பள்ளிகுடாவிலிருந்து ஞானிமடம் வரையிலான கடற்கரை பகுதியில் அமைக்கப்படுள்ள காற்றாலை தொடர்பாகவும்  பிரதேச மக்களின் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் தொடர்பான கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கேட்டறிந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X