Freelancer / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் நோக்கில், நில அளவீடு மேற்கொள்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரி முனை கிராம அலுவலர் பிரிவில், இறால் வளர்ப்பு திட்டத்துக்கு 98 ஏக்கர் காணியை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில், நேற்று (04) நில அளவீடு செய்ய முற்பட்டபோது, நில அளவீட்டுப் பணிகள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இன்மை, 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்தக் காணிகள் இன்றி வாழுதல் என பல்வேறு காணித் தேவைகள் உள்ளபோதும், தனியாருக்கு சொந்தமான காணிகளையும் அரச காணிகளையும் உள்ளடக்கியதாக சுமார் 98 ஏக்கர் காணியை தனியாருக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், குறித்த அளவீட்டுப்பணிகள் தடுக்கப்பட்டு உள்ளன.
பூநகரி பிரதேச செயலாளர் த. அகிலன், சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். R
15 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
3 hours ago