2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குடிதண்ணீர் போத்தல்களின் விற்பனை பிரதிநிதிகளுக்கு பிணை

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

மாசுத்துணிக்கைகள் கலந்த குடிதண்ணீர் போத்தல்களை முல்லைத்தீவுப்பகுதியில் விற்பனை செய்த உற்பத்தியாளர், முகவர், விற்பனைப்பிரதிநிதி ஆகிய மூவருக்கும் 99 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.எம்.எஸ்.ஸம்சுதீன், செவ்வாய்க்கிழமை (22) தீர்ப்பளித்தார்.

முல்லைத்தீவுப்பகுதியில் விற்பனை செய்யப்படும் குடிதண்ணீர்ப் போத்தல்களில் மாசுத்துணிக்கைகள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இது குறித்துச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதற்கமைய சுகாதாரப் பரிசோதகர் 20 லீற்றர் கொண்ட 10 குடிதண்ணீர் போத்தல்களைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்ததுடன் உற்பத்தியாளர், இரு விற்பனைப்பிரதிநிதிகள் ஆகிய மூவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

தவணை அடிப்படையில் இடம்பெற்று வந்த வழக்கு, செவ்வாய்க்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்த மாசுத்துணிக்கைகள் கலந்த நீரை விற்பனை செய்தமைக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும் காதாரப் பரிசோதகருக்கு தவறான தகவலை வழங்கியமைக்காக தலா 3 ஆயிரம் ரூபாயும் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .