2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குடிநீர் இன்றி தவிக்கும் கோணாவில் மக்கள்

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கோணாவில் பகுதியிலுள்ள மக்கள், தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கரைச்சிப் பிரதேச சபையின் கீழுள்ள கோணாவில், அறிவியல் நகர், உருத்திரபுரம், செருக்கன் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோணாவில் கிழக்கு பகுதியில் சுமார் 240 குடும்பங்கள், தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

'குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு மிக நீண்ட தூரத்துக்குச் செல்;ல வேண்டியுள்ளதுடன், மீள்குடியேற்றத்தின் பின்னர் அமைக்கப்பட்ட பொதுக்கிணறுகள், தண்ணீரின்றிக் காணப்படுகின்றன' என மக்கள் தெரிவிக்கின்றனர்.

'எமக்கான குடிநீரை வழங்குமாறும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றிடம் கோரிக்கை விடுத்த போதும், இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை' எனவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

'எமது கோரிக்கையை ஏற்று, எதிர்காலத்தில் நீர்த்;தாங்கியொன்றை அமைத்து அதன்மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உறுதியளித்துள்ளது. எனினும், தற்போது நாம் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லை' என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .