2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காணி உறுதி, நிரந்தர வீடு கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன்திட்டம் உழவனூர் மற்றும் தம்பிராசாபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கவேண்டுமென்பதுடன், நிரந்தர வீடுகள் அமைத்துத் தரவேண்டுமெனக் கோரியும் இன்று  புதன்கிழமை (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1966ஆம் ஆண்டு மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்ட இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 350 குடும்பங்கள் இந்த ஆர்;ப்பாட்டத்தை மேற்கொண்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் பேரணியாக  மாவட்டச் செயலகம்வரை சென்று, மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜரையும் கையளித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய வகுப்புத் திட்டத்தில் காணிகள் வழங்கப்பட்ட 1,050 குடும்பங்கள் இன்னமும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .