2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காணாமற்போன சிறுவன் குளத்திலிருந்து மீட்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முறிப்புப் பகுதியிலிருந்து காணாமற்போன 5 வயதுச் சிறுவன், அப்பகுதியிலுள்ள சிறிய குளத்துக்குள் இருந்த மரத்திலிருந்து நேற்றுப் புதன்கிழமை (26) மாலை மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சோலை முறிப்புப் பகுதியைச் சேர்ந்த லோகராசா சுலக்ஸன் (வயது 5) என்ற சிறுவனே மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குளத்துக்குச் சென்ற சிறுவன், குளத்தில் மூழ்கி, குளத்தில் இருந்த மரத்தின் கிளையைப் பிடித்து அந்த மரத்தில் ஏறி இருந்துள்ளான். இதனை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் சிறுவனைக் காப்பற்றியுள்ளனர்.

சிறுவன் காணாமற்போனமை தொடர்பில் சிறுவனின் தாயார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .