2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிராம சேவகரின் தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதேசத்தில்  வசிக்கும்  கிராம சேவகர் ஒருவர், மறைந்திருந்து கல்லினால்  தாக்கியதில்  அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்  தலையில் பலத்த காயஙகளுடன்; கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, புதன்கிழமை இரவு, குறித்த  கிராம சேவையாளர்  வீட்டுக்கு முன்பாக மோட்டார் வாகனத்தின் ஒலியை எழுப்பினார்  என, குறித்த கிராம சேவகர்  மறைந்திருந்து  வீதியில் சென்றவரை கல்லால் தாக்கியுள்ளார்.

பின்னர், அவரது குடும்பத்தினர் 7 பேருக்கும் அதிகமானவர்கள்  இணைந்து தாக்குதல் நடத்தியதில்  குறித்த நபர்  மயக்கமுற்று கிராமமக்களால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அத்துடன், குறித்த  நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை,  கிராம சேவையாளர்  கிளிநொச்சி  பொலிஸ் நிலையத்தில் செய்த  முறைப்பாட்டினை அடுத்து,  கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் தெரிவிக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .