Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாணசபை, கிளிநொச்சி செயலகத்துடன் இணைந்து கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை இன்று ஏற்பாடு செய்திருந்தது.
இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உள்ளிட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன.
இவற்றோடு, நில அளவைத் திணைக்களம், தொழில் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட மத்திய அரசுக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களும் கலந்துகொண்டு தங்கள் சேவைகளை வழங்கியிருந்தன.
வடமாகாண முதலமைச்சர் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர்கள், வடமாகாணசபை உறுப்பினாகள் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்கள்.
பின்தங்கிய பிரதேசங்களுக்கு நேரடியாகச்சென்று அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கென வடக்கு மாகாணசபையால் மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் குறைநிவர்த்தி நடமாடும் சேவைத் தொடரில் கிளிநொச்சியில் இடம்பெற்றது இது 8வது குறைநிவர்த்தி நடமாடும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
1 hours ago
3 hours ago