2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிளி. மத்திய கல்லூரிக்கு 3 மாடிக்கட்டடம்: கல்வியமைச்சர் உறுதி

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்   

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டடம் அமைத்துத் தரப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உறுதியளித்தார்.  

கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை (28) விஜயம் செய்த அமைச்சர், கல்லூரியின் தேவைகள், வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.  

75 ஆசிரியர்கள், 1,200 மாணவர்கள் கொண்ட இந்தப் பாடசாலையில், போதிய வகுப்பறை இல்லாமையால், 20 வகுப்புக்கள் தற்காலிக கொட்டகைகள் இயங்குகின்றன. மேலும், ஒன்றுகூடல் மண்டபமும் இல்லை. இந்தவிடயம் கல்வி அமைச்சருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.  

இதனைக் கேட்ட அமைச்சர் 50 மில்லியன் ரூபாய் செலவில் 3 மாடிக் கட்டடம் அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .