Niroshini / 2021 ஜூன் 06 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு வவுனியா - சகாயமாதாபுரம் பகுதியில் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சகாயமாதாபுரம் பகுதியில், கொரோனா தொற்றுநோயாளர்கள் சிலர் அண்மையில அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று (05), குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா சுகாதார பிரிவினர், நிலைவமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், கிராமத்துக்குள் உட்பிரவேசிக்கும் முக்கியவாயில்களில், பொலிஸாரையும் இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், அத்தியவசிய தேவையைத் தவிர்ந்த ஏனையவர்கள் கிராமத்துக்குள் செல்வதற்கும், கிராமத்தில் இருந்து வெளிச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago
14 Nov 2025