Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கே ஆதரவு வழங்குவதாக, முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அன்டனி திருஞானதீபன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாஸவிடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி நிலைமை தொடர்பாக எடுத்துரைத்து இருந்ததாகவும் கூறினார்.
பிற மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் வருகையால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி நிலைமை, நந்திக்கடல் துப்பரவு செய்தல், வெளிச்ச வீடு அமைத்தல் உட்பட பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம்.
சஜித் பிரேமதாஸவும் எமக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு எமது ஆதரவை வழங்குவதாகவும், சமாசத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago