Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவில் சடலங்களை எரியூட்டுவதற்கு மின் தகன வசதியை ஏற்படுத்துங்கள் என, கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் த. அமலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடமாகாணத்தில், யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தான் மின்சாரம் மூலம் சடலங்களை எரியூட்டுவதற்கான வசதிகள் உள்ளன என்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் மின்சாரம் மூலம் சடலங்களை எரிப்பதற்கான வசதிகள் இல்லை என்றும் கூறினார்.
'தற்போது கொரோனா காரணமாக, இறப்புகள் நிகழ்கின்ற போது முல்லைத்தீவில் இருந்து வவுனியாவுக்கு தான் சடலங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் காரணமாக பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இறப்புகளை எதிர்கொள்கின்ற குடும்பங்களுக்கு ஏற்படுகின்றன.
'எனவே, முல்லைத்தீவில் மின்சாரம் மூலம் உடல்களை எரிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படுமானால், பெருமளவு சிரமங்கள், அலைச்சல்கள் மக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படாது' எனவும், அமலன் தெரிவித்தார்.
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago