Niroshini / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
மின்சாரம் மூலம் சடலங்களை எரியூட்டுவதற்கான கட்டடம் அமைப்பதற்கான நிதியோ, அனுமதியோ இதுவரை கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா காரணமாக, முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சடலங்களை எரியூட்டுவதற்காக, தண்ணிரூற்று - நெடுங்கேணி வீதியில் உள்ள இடமொன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், மின்சாரம் மூலம் எரியூட்டுவதற்கான கட்டடத்தை அமைப்பதற்கான அனுமதியோ, நிதியோ இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், 03 கோடி ரூபாய் வரை மின்சாரம் மூலம் சடலங்களை எரிப்பதற்கான கட்டடம் அமைப்பதற்கான செலவுகள் ஏற்படும் எனவும் கூறினார்.
'அக்கட்டட வேலைகளும் மூன்று மாதங்களுக்கும் மேல் முன்னெடுக்கப்பட நேரிடும். அதனால், இப்போதைய சூழலில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் இருந்து சடலங்களை தகனம் செய்வதற்கான இடமே தெரிவு செய்யப்பட்டுள்ளது' மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
11 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago