Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலத்தை இனங்காண பொதுமக்கள் உதவியை, பறயனாலங்குளம் பொலிசார் கோரியுள்ளனர்.
ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று, பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும், அவர் குறித்த மேலதிக தகவல்கள் அடையாள அட்டைகள் என்பன அவரிடம் காணப்படவில்லை.
இவர் இன்று வரையிலும் அடையாளம் காணமுடியவில்லை. இறந்தவர் கறுப்பு நிற நீளக்காட்சட்டையும் வெளிர் நிறமுடைய சேட்டும் தலைமுடி குறைந்து பக்கவாட்டில் சீவியிருந்தார்.
இந்த நபரை இனங்காண்பதற்கு, பொதுமக்கள் 024-3242448 / 071-8592115 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பறயனாளங்குளம் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
41 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago