2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகள் முல்லைத்தீவில் குறைந்தன’

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக, மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொடர்ந்துரைத்த திணை்களம், முல்லைத்தீவு மாவட்டத்தில், இவ்வாண்டு சட்டவிரோத கடற்றொழில்களில் ஈடுபட்டவர்கள் 55 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த திணைக்களம், தொடர்ந்தும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இவ்வாறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .