2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’சட்டவிரோத மணல் அகழ்வுக்கு ஒரு வாரத்தில் தீர்வு’

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

எதிர்வரும் வாரத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முழுமையான நடவடிக்கைப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் பி.ஏச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டு பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் பணிமனையின் திறப்பு விழா, நேற்று (17) நடைபெற்றது.

இதன்போது நிகழ்வில் கலந்துகொண்ட விவசாயிகள், மாவட்டத்தில் பரவலாகச் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட மேலதிகச் செயலாளருக்கும் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும், ஆளுநர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சட்டவிரோத மணல் அகழ்வு குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .