2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்

Niroshini   / 2021 ஜூன் 06 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த வாராம் விசேட கலந்துரையாடலொளன்று nடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 105 கிராம சேவையாளர் பிரிவுகளில்,  தற்போது 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் மாத்திரம், தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்படும் மணல்,  திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மணல் கொண்டு செல்வதற்குரிய அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வெளி மாவட்டங்களுக்கு மணல்  கொண்டு செல்லப்படுகின்றது.

தற்போது பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்திலிருந்து வடபகுதிக்கு மணல்  கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவெளை, நேற்று முன்தினம் (05) நடைபெற்ற கலந்துரையாடலில், திருகோணமலையில் இருந்து வருவதற்கான வழித்தட அனுமதிகளின் படி  கிளிநொச்சிக்குள் நுழைவதற்கு முன் ஏ-35 வீதி  மற்றும் ஏ-09 வீதிகளில் நெத்தலியாறு . இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளில், பொலிஸாரின் சோதனை சாவடிகளில் பரிசோதித்து கையெப்பமிடப்பட வேண்டும். அவ்வாறில்லாது  கொண்டு செல்லப்படும் மணல் அல்லது கிரவல் சட்டவிரோதமானது என்று, கனிய வளத்திணைகள அதிகாரி தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும்  சட்டவிரோத மணல் அகழ்வுகளை   கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும்  முகமாக, இந்த வாராம்,  மாவட்ட அரச உயரதிகாரிகள், பொலிஸார், இரானுவத்தினர், பிரதேச செயலாளர்களை உள்ளிடக்கிய வகையில், விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .