Niroshini / 2021 ஜூலை 07 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் சந்தைக் கட்டடத்தை, நெல் கொள்வனவு நிலையமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 8 ஆண்;டுகளுக்கு முன்னர் திறக்கட்ட இச்சந்தைக் கட்டடமானது, இதுவரை காலமும் இயங்கவில்லை எனத் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், இக்கிராமத்தில் கூடுதலான மக்கள் மரக்கறி உற்பத்தியில் ஈடுபடுகின்றதன் காரணமாகவே, சந்தைப் பக்கம் வருவதில்லை எனவும், இதனாலேயே சந்தை இயங்காமல் இருப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில், இந்தச் சந்தைக் கட்டடத்தை, நெல் கொள்வனவு நிலையமாகவோ அல்லது பல்பொருள் விற்பனை நிலையமமாகவோ மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென, கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago