Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில், வெள்ளத்தால் அழிவடைந்த நெற்பயிர்களை சரியான முறையில் அதிகாரிகள் மதிப்பீடு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ள என கமக்கார அமைப்புகள் உறுதி செய்துள்ள போதிலும் மழை வெள்ளம் முடிந்தும் நீண்ட நாட்களுக்கு பின்னர் வயல் நிலங்களுக்குச் சென்ற அழிவுகளை மதிப்பீடு செய்கின்ற அதிகாரிகள் அழிவுகளை சரியான முறையில் மதிப்பீடு செய்யாததன் காரணமாக அழிவுகளை எதிர்கொண்ட விவசாயிகள் இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அழிவுகள் ஏற்பட்டுள்ளன என விவசாயிகள் அறிவித்த பின்னர், நீண்ட நாட்களுக்குப் பின்னரே அழிவுகளை மதிப்பீடு செய்ய அதிகாரிகள் சென்றதன் காரணமாக, சரியான முறையில் மதிப்பீடுகள் இடம் பெறவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago