2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’சாதாரண தரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை’

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

எதிர்வரும் மாதமளவில், க.பொ.தா.சாதாரண தரத்துக்கு கீழ் உள்ள கல்வித் தகமையை கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டக் கடற்றொழில் திணைக்களக் கேட்போர் கூடத்தில், நேற்று  (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், க.பொ.தா.சாதாரண தரத்துக்கு மேல் கல்வித் தகமைகளைக் கொண்டவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் கூறினார்.

எனவே க.பொ.தா.சாதாரண தரத்துக்கு மேல் உள்ள கல்வித் தகமைகளைக் கொண்டவர்கள், உங்களின் கோரிக்கை கடிதத்துடன் சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .