2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிகிச்சை பெறுவதில் சிக்கல்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கால்நடைப் பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வருமானம் பெறும் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு காணப்படுவதுடன், அதிகளவான மக்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கால்நடைகளுக்கு ஒருவித நோய் பரவி வருவதுடன், கால்நடைகளும் இறக்கின்றன.

இவ்வாறு பாதிக்கப்படும் பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதில், பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு பகுதியில், கால்நடைகளுக்கான நோய் தற்போது அதிகரித்துள்ள நிலையில், நோய் தொடர்பில் சிகிச்சை பெறும் நோக்கில் மாந்தை கிழக்கு கால்நடை வைத்தியநிலையத்துக்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும் வைத்தியருக்குரிய வாகன வசதிகள் இல்லையென்பதை காரணம் காட்டி சிகிச்சை வழங்குவதால் தாமதங்கள் ஏற்படுகிறது.

அத்துடன், சேவை பெறச்செல்லும் பண்ணையாளர்களை வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு தங்களை கேட்பதாக, பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளதுடன், வாகன வசதிகளே இல்லாத மிகவும் பின்தங்கிய பகுதியில் வாழும் தாங்கள் இவ்வாறு, வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு, வாகன வசதிகளை ஏற்படுத்தமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் கேட்டபோது, மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில கால்நடை வைத்திய சேவை நிலையங்களுக்கு மாத்திரமே வாகன வசதிகள் உள்ளன.

மாந்தைகிழக்கு போன்ற அலுவலகங்களுக்கு வாகன வசதிகள் இல்லாத காணரத்தால் மேற்படி பிரச்சினை காணப்படுகின்றன, என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .