2025 மே 19, திங்கட்கிழமை

சின்னச்சிப்பிகுளத்தில் கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வவுனியா - சின்னச்சிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு, சனிக்கிழமை (30) பாடசாலை அதிபர் எஸ்.எச்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், வவுனியா தெற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.பரணீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, உயர்மட்ட பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்குக் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஆசிரியர் உள்ளிட்ட பாடசாலையின் இணைபாடவிதான ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X