2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிறுபோக நெற்செய்கையின் அளவு அதிகரிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழான தற்போதைய நீரின் அளவைக் கொண்டு 20,022 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன இரணைமடு குளம் உள்ளிட்ட  குளங்களில் அண்மைய நாட்களாக பெய்யும் மழை காரணமாக நீர்மட்டம்  உயர்வடைந்து காணப்படுகிறது.

இரணைமடு குளத்தின்  நீர்மட்டம் நிறைவு மட்டத்தை எட்டிய நிலையில் குளத்தின் சிறுபோக நெற்செய்கை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 16,211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான  கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் குளத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்ததை அடுத்து குளத்தின் நீர் விநியோக பரப்பிற்குட்பட்ட  20,022 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை  மேற்கொள்ளப்படவுள்ளது . (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .