Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா கணேசபுரத்தில், சிறுமியொருவர் அண்மையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்வத்துக்குக் கண்டனம் தெரிவித்தும், குறித்த பகுதியில், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் அடாவடித்தனத்துக்கு எதிராக, உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும், இன்று (23) பிரதேச மக்கள் பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, கணேசபுரம் ஆலயம் முன்பாக, இன்று காலை ஆரம்பித்த குறித்த பேரணி, குழுமாட்டு சந்தி வீதி வழியாகச் சென்று, நெளுக்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றடைந்தது.
கடந்த 14 ஆம் திகதி, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலுமோர் நபரைத் தேடி வருகின்றனர்.
பாதிப்புக்குள்ளான சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே, இந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதி பெற்றுத் தரப்படும் என்று, வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ் குமாரசிங்க உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து, ஊர்வலமாக சென்ற மக்கள், நெளுக்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
14 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago