Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
“சில தினங்களில், சில காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது கட்சி செய்யவில்லை” என, ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டொக்டர் விஜயராயன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பொன்று, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுடன் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே நாம் போட்டியிடுகின்றோம். நாம் அரசாங்கத்தின் நேரடியான தொடர்புடையவர்கள். நாம் ஆட்சியமைத்தால், மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க எங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
“இதன் முதல் கட்டமாக, சில தினங்களில், சில காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது கட்சி செய்யவில்லை. அரச அதிகாரிகள் செய்துள்ளனர். நாம் ஆட்சியைக் கைப்பற்றினால், பல அபிவிருத்திகளை செய்வோம்” என்றார்.
இதேவேளை, யுத்தம் நிறைவுற்று நீண்ட காலம் ஆகியுள்ள நிலையில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை தொடர்பில் அவரிடம் வினவியபோது,
மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தாம் உழைக்க உள்ளதாகவும், பிரதேச சபைகளுக்கான நிதி போதாமல் இருந்தால் அரசாங்கத்துடன் பேசி அமைச்சரவை ஊடக அவற்றை பூர்த்தி செய்ய தாம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
23 minute ago
27 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
4 hours ago
4 hours ago