2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிவலிங்க சிலையால் முறுகல்

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில், பிரதேச செயலகத்தின் ஆளுகையின் கீழ் உள்ள பொதுக் காணி ஒன்றில், சிவலிங்க சிலையொன்று அமைக்கப்பட்டு, கிராம மக்கள் நேற்று (10) வழிபாடுகளை மேற்கொண்டதால், அப்பகுதி மக்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுகலகும் இடையில் முறுகல் ஏற்பட்டது. 

சிவராத்திரியை முன்னிட்டு, சிவலிங்க சிலை அமைக்கப்பட்டு கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இப்பகுதிக்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் வருகை தந்து, இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, பிரதேச சபையின் அனுமதி பெற்றே அனைத்து கோவில் கட்டிடங்களை அமைக்கவேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சபை உறுப்பினர் எஸ்.குகனேசன் மக்களிடம் சுட்டிக்காட்டினார்.

இருந்தும், குறித்த காணி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதால், பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை உள்ளதாக, சபையின் தவிசாளர் அ.தவக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தப் பகுதியில் பல கிறிஸ்தவ சபைகள் காணப்பட்ட போதும், 800 வரையான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்களெனத் தெரிவித்த அப்பகுதி மக்கள், கோவில்களுக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால், நீண்டதூரம் செல்ல வேண்டுமெனவும் இதனை கருத்தில்கொண்டே, குறித்த பகுதியில் சிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்க சிலை அமைக்கப்பட்டதாகவும் கூறினர்.

அத்துடன், பல சபைகள் மற்றும் ஏனைய மார்க்கங்களின் சிலைகள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதியுடனா கட்டப்பட்டுள்ளன எனவும், அப்பகுதி மக்கள் வினவினர்.

இதையடுத்து கருத்துரைத்த தவிசாளர்,  இது குறித்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிராமத்தில் கிராம மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே, இந்த சிலை வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளதென, கிராம அமைப்பினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .