Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சுகாதார தொண்டர்கள் விடயத்தில், தாம் முன்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, வடக்கு மாகாண ஆளுநருடன் தகவல்களைப் பரிமாறிகொள்வதற்கு எந்நேரமும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்த வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், உண்மையான சுகாதார தொண்டர்களின் பட்டியல்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், சுகாதார தொண்டர்கள் விடயத்தில், தற்போது, அரசியல் தலையீடு இருப்பதாகவும், அவர் கூறினார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தான் மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த போது, மாவட்ட ரீதியாக சுகாதார திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட உண்மையான சுகாதார தொண்டர்களின் பட்டியல்கள், அமைச்சர்வாரியத்தின் அங்கிகாரம் பெறப்பட்டு, மத்திய அரசாங்கத்துக்கும் அப்போது கடமையாற்றிய ஆளுநருக்கும் அனுப்பட்டதாகவும் இப்போதும் அந்தப் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.
அப்போது மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த குணசீலனால் அந்தப் பட்டியல் மாகாணசபையில் முன்வைக்கபட்டு, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கபெற்றதாகத் தெரிவித்த அவர், இனிமேல் ஆட்சேர்பை மேற்கொள்ளும் போது, அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நியமனம் வழங்கபட வேண்டும் என்று, வடக்கு மாகாண சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளபட்டதாகவும் கூறினார்.
ஆனால் அந்த விடயம் நடைமுறைப்படுத்தபடாததன் விளைவே, இன்று சுகாதார தொண்டர்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு காரணமாகியுள்ளதெனவும், அவர் மேலும் கூறினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago