Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்ட மக்கள், கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, வைரஸ் தொற்றிலிருந்து தங்களையும் பாதுகாத்து, சமூகத்தையும் பாதுகாக்குமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தினார்.
மாவட்டச் செயலகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதை வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு, யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 18 மாணவர்களும் கண்டாவளை, வெளிக்கண்டல் இராணுவ முகாமில் மூன்று இராணுவத்தினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
“இவர்கள் அனைவரும் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்துப் பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை எனவும், தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பேணி, வரும் முன் காக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவட்டச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago