Niroshini / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் சடலங்களை, சுட்டதீவில் தகனம் செய்யலாம் என, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி நகரத்தில் மின்சாரம் மூலம் சடலங்களை எரிப்பதற்கான வசதிகள் இல்லை எனவும் அதற்கான கட்டடத்தை அமைப்பதற்கும் 3 கோடி ரூபாய் வரையான நிதி தேவைப்படுகின்றது எனவும் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் தகவல்களை தெரிவித்து உள்ளதாகத் தெரிவித்த அவர், இதேவேளை கொரோனா காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை, உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சுட்டதீவில் தகனம் செய்யலாம் எனவும் கூறினார்.
சுட்டதீவின் 05 கிலோமீற்றர் சுற்றளவில் மக்கள் குடியிருப்புகள் இல்லை எனத் தெரிவித்த அவர், "இதேவேளை, கொரோனா காரணமாக உயிரிழக்கும் சடலங்களை கூடுதலாக யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தற்போது எரியூட்டப்படுகின்றன. போக்குவரத்து நெருக்கடிகளை குடும்பங்கள் சந்திக்கின்றன. கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் உள்ள அமரர் ஊர்தியை பிரதேச சபையிடம் கையளிக்கப்படுமானால், இலவசமாக பிரதேச சபை சடலங்களை எரியூட்டுவதற்கான போக்குவரத்தில் ஈடுபடும். அமரர் ஊர்தி முன்பு பிரதேச சபையிடம் தான் இருந்தது" எனவும் தவிசாளர் தெரிவித்தார்.
5 minute ago
32 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago
53 minute ago
1 hours ago