2025 மே 15, வியாழக்கிழமை

சுற்றுலா மையத்துக்கு எதிராக சுவரொட்டிகள்

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா – குளத்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வவுனியாவின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“வவுனியா குளத்துக்கான மக்கள் செயலணி” என்று உரிமைக் கோரப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில், “வவுனியா நகர சபையே வவுனியாக்குளத்தைக் கூறுபோட்டு விற்காதே”, “நீர்ப்பாசனத் திணைக்களமே குளத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்புக்குத் துணைபோவதா?”, “நிலத்தடி நீருக்கும் நெல் உற்பத்திக்கும் ஆப்புவைப்பதா அபிவிருத்தி” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .