Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும் சிறுவர் இல்ல பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் (15).
குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, சிறுவர் இல்ல வளாகத்தில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுவதோடு, தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை. இருப்பினும், இம்முறை இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களிலும் இன்று(15) பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் நிகழ்வுகளை தடை செய்யும் முகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு மகா வித்தியாலய முன்றலுக்கு சற்று முன்னர் வருகை தந்த தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன், உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நினைவாக சுடரேற்றி, மலர் தூவி, அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
இந்த விமானத் தாக்குதலில் முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவிகள் கம்சனா ராஜ்மோகன், கலைப்பிரியா பத்மநாதன், தனுஷா தணிகாசலம், சுகந்தினி தம்பிராசா, வத்சலாமேரி சிவசுப்பிரமணியம், திவ்யா சிவானந்தம், பகீரஜி தனபாலசிங்கம், கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை ஆகிய எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago